ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது உரிய பணிக்குழு தொடர்பில் வினவிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள படைக்கு தாம் விரும்பிய நபரை நியமிக்கும் திறன் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் கூறுவது, செய்வது என அனைத்திற்கும் ஆலோசனைக்காக கட்சித் தலைவர்களிடம் சென்றால், நண்பர்களுடன் பழகுவதற்கு அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சராக அலி சப்ரி பதவியேற்ற போதும் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்றதாகவும், ஆனால் தற்போது சப்ரி அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சேவையை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)