யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களுக்குள் காலணிகளுடன் பிரவேசித்த காவல்துறை அதிகாரியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காங்கேசன்துறை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரே இவ்வாறு ஆகம விதிகளை மீறி ஆலயங்களுக்குள் காலணிகளுடன் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று நண்பகல் சென்ற காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் மற்றும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலயங்களுக்கு வெளியில் காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், மேற்படி காவல்துறை அதிகாரி காலணிகளைக் கழற்றாது ஆலயங்களுக்குள் சென்ற விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.