பிரதமரின் கடைசி புதல்வரான ரோஹித ராஜபக்ச எதிர்வரும் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இன்று (13) தனது முதல் கிரிக்கெட் பயிற்சி போட்டியை தொடங்கினார்.
முன்னாள் ரக்பி வீரரான ரோஹித கடந்த காலங்களில் இராணுவ ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
வரவிருக்கும் 50 ஓவர் போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஒரு பயிற்சி போட்டியில் இன்று அவர் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.