மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அமர்ந்து பயணிப்பவர்களுக்காக மாத்திரம் இயக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பும் எனவும், அதன்படி நாளை 152 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)