இன்று (10) 72ஆவது இராணுவ கொண்டாட்டத்தை முன்னிட்டு அநுராதபுரம் சாலியபுரவிலுள்ள கஜபா கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிரிக்கெட் மைதானத்தையும் திறந்து வைத்தார்.
மைதானம் திறக்கப்பட்ட பின்னர், கிரிக்கெட் வீரர் திசர பெரேராவின் பந்தை ஜனாதிபதி எதிர்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.