எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர கொள்ளை!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர கொள்ளை!

மஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று காலை 06 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மிரட்டி இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் எரிபொருளை செலுத்தும் பெயருடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து குறித்த இருவரும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 45,000 ரூபாயை திருடிவிட்டு, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பவத்தை மேற்கொள்வதற்கு முன்னர் குறித்த நபர்கள் மூன்று முறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று காலை பொரலஸ்கமுவ வெவ வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.