'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் ஜனாதிபதி செயலணி தொடர்பில் ஜம்மியத்துல் உலமா அதிர்ச்சி!

'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் ஜனாதிபதி செயலணி தொடர்பில் ஜம்மியத்துல் உலமா அதிர்ச்சி!


ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். அண்மைக் காலமாக இத்தலைப்பு பொதுத் தலங்களில் பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது. இலங்கையில் வாழக்கூடிய சகல பிரஜைகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பிற்கு அமைய, ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அமைப்பில், அவரவரது மத விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் பேணி, மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மதங்களை மதித்து நடக்கக்கூடிய மதத்தலைவர்கள் பலர் வாழும் நம் நாட்டில், மதநிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஒருவர் பொறுப்பான ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் கவலையும் அதிருப்தியும் அடைகின்றோம். இதன் மூலம் முஸ்லிம்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

இந்நியமனம் சர்வதேச மட்டத்தில் நம் நாட்டுக்கு அகௌரவத்தைக் கொண்டு வரும் ஒரு விடயமாகவும் அமைந்துள்ளது.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அமைதி, சமாதானம், சுபீட்சம், ஆரோக்கியம் மற்றும் அபிவிருத்தி  ஏற்பட்டு எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

 அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.