வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!


மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உள்ளிட்ட 05 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டது.


கடந்த 2019 ஏப்ரல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிஸார் புதைத்தனர்.


இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இனைப்புச்செயலாளர் யோ.ரொஸ்மன், இளைஞர் ஒருங்கினைப்பாளர் அனோஜன் மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகரன் மற்றும் அருள்தாஸ் சுசிகலா ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் கார்த்திகை மாதம் 10ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கில் மாநகர சபை உறுப்பினர் செல்வி மனோகரன் கடந்த மாதம் புற்றுநோய் பாதிப்பினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.