முடிந்தால் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள்.
என்னதான் ஆடினாலும் அரசின் பலத்தைக் காட்டுகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சவால் விடுத்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளைப் பயன்படுத்தி எதிரணிகள் போராட்டம் நடத்துகின்றன எனவும், இதன் பின்னணியில் முழுமையாக அரசியலே இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.