சட்டவிதிகளை மீறும் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மன்னிப்பு கிடையாது! -வக்பு சபை

சட்டவிதிகளை மீறும் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மன்னிப்பு கிடையாது! -வக்பு சபை

வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன்

கொவிட் 19 தொடர்­பான சுகா­தார அமைச்சின் சட்ட விதி­க­ளையும், வக்பு சபையின் வழி­காட்­டல்­க­ளையும் மீறும் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு ஒரு போதும் மன்­னிப்பு வழங்­கப்­ப­ட­ மாட்­டாது. 


அவ்­வா­றான நிர்­வா­கிகள் உடன் பதவி நீக்கம் செய்­யப்­ப­டு­வ­துடன் வெற்றிடங்க­ளுக்கு புதி­ய­வர்கள் நியமிக்கப்ப­டு­வார்கள். அத்­தோடு கொவிட் சட்­டதிட்­டங்­களை மீறி­ய­மைக்­காக பொலி­ஸா­ரினால் வழக்கு தொட­ரப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என வக்பு சபை அறி­வித்­துள்­ளது.


கொவிட் 19 தொடர்­பான சுகா­தார அமைச்சின் சுற்று நிருபம், புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கா­ரங்கள் அமைச்சின் சுற்று நிருபம் மேலும் வக்பு சபையின் வழி­காட்­டல்­களை மீறி கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ கூட்டுத் தொழுகை நடாத்­திய வவு­னியா நகர் பள்­ளி­வாசல் மறு அறி­வித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.


ஜும் ஆ கூட்டுத் தொழு­கைக்கு அனு­ம­தி­ய­ளித்த வவு­னியா நகர் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை பதவி நீக்கம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நிர்­வாக சபை­யொன்று நியமிக்கப்படவுள்ளதா­கவும் அவர் கூறினார். பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொட­ரு­வ­தற்கு பொலி­ஸாரும், சுகா­தா­ரத்­து­றை­யி­னரும் நடவ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.


இதேவேளை கிழக்கு மாகா­ணத்தின் சில பள்­ளி­வா­சல்­களில் மீலாதுன் நபி மெள­லூது ஓதும் நிகழ்வு இடம்­பெற்­ற­தை­ய­டுத்து பொலி­ஸாரும், பொதுசுகாதார அதி­கா­ரி­களும் அந்­நி­கழ்­வு­களை தடை­செய்து சம்பந்தப்பட்டவர்கள் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த வக்பு சபையின் தலைவர் அவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள் தொடர்­பான அறிக்­கையை பொலிஸா­ரிடம் கோரி­யுள்­ள­தா­கவும் சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வாசல் நிர்வாகங்களுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் கூறினார்.


பொலி­ஸா­ருக்கும், பொது சுகா­தார அதி­கா­ரி­க­ளுக்கும் கிடைக்­கப்­பெற்ற தகவ­லை­ய­டுத்து பொலி­ஸாரும், சுகா­தார துறை­யி­னரும் கடந்த வெள்ளிக்கிழமை வவு­னியா நகர் பள்­ளி­வா­சலில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்­ற­போது திடீர் சோதனை நடாத்­தினர். அச்­சந்­தர்ப்­பத்தில் பள்ளிவாசலில் சுமார் 75 பேர் தொழு­கைக்­காக ஒன்று கூடி­யி­ருந்­தனர்.


பள்­ளி­வா­சலில் கூட்­டுத்­தொ­ழு­கைகள் தடை­ செய்­யப்­பட்­டி­ருப்­பதால் பொலிஸார் கூடி­யி­ருந்­த­வர்­க­ளையும், நிர்­வா­கத்­தி­ன­ரையும் எச்­ச­ரித்­தனர். மறு­தினம் ‘சனிக்­கி­ழமை’ மறு­ அ­றி­வித்தல் வரை பள்­ளி­வாசல் மூடப்பட்டிருப்ப­தாக அங்கு அறி­வித்தல் ஒட்­டப்­பட்­டது. தொடர்ந்தும் பள்ளிவாசல் மூடப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.


பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ஒரு­வரை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். 


'பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­காக ஒன்று கூடி­ய­வர்­களின் பெயர் விப­ரங்­களை பொலிஸார் தரு­மாறு கோரி­னார்கள். அவர்­க­ளுக்கு பிசிஆர் பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டு­மென்­றார்கள்.


தொழு­கைக்­காக வருகை தந்­த­வர்கள் தமது விப­ரங்­களைப் பதி­வ­தற்கு பள்ளிவா­சலில் பதி­வேடு ஒன்று பேணப்படாமை கார­ண­மாக அந்த விபரங்களை வழங்க முடி­யாது என நாங்கள் தெரிவித்தோம். அவ்வாறான விபரங்களை கையளித்தால் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை மீளத் திறப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என்றார்கள்.


இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் நாட்டின் சட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமெனவும் வக்பு சபையின் தலைவர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களையும் கோரியுள்ளார்.


-ஏ.ஆர்.ஏ. பரீல்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.