நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்!


நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.


இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (25) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,654 ஆக அதிகரித்துள்ளது.


அதேநேரம், நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது சாதாரணமான விடயம் அல்ல என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


கொரோனா நோய்த் தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக மரணங்கள் அதிகரித்தனவா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


மரணங்களின் அதிகரிப்பு தொடர்பில் இந்த கட்டத்தில் திட்டவட்டமாக எதையும் கூற முடியாது என்றும், கொரோனா மரணங்களில் ஏற்ற இறக்கங்கள் சாதாரணமாக நிகழக்கூடும் என்றும் தெரிவித்தார்.


இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது எனவும், தொற்றுநோயியல் பிரிவு, மரணங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்கும் எனவும் தெரிவித்தார்.


நமக்கே தெரியாமல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது சந்தேகமே என்று தெரிவித்த அவர், இந்த நிலை காரணமாக அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.