நபிகளாரின் பிறந்த நாள் அன்று சூபி முஸ்லிம்கள் மீது வஹாப்வாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நபிகளாரின் பிறந்த நாள் அன்று சூபி முஸ்லிம்கள் மீது வஹாப்வாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?


நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாடும் சூபி முஸ்லிம் சமூகத்தின் மீது வஹாப்வாதிகள் தாக்குதல்களை நடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதால் இம்மாதம் முழுவதும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம் மக்களைப் பாதுகாக்குமாறு கோரி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அதில் இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம் சமூகம், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை இம்மாதத்தில் கொண்டாடும் நிலையில் அதனை வஹாப்வாதி குழுக்கள் பல்வேறு வகையில் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பது குறித்து தொடர்ச்சியாக அவதானிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.