பண அனுப்பல்களை அதிகரிப்பதற்காக 'SL-Remit' என்ற பணம் அனுப்பும் செயலியொன்றை இலங்கை மத்திய வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முறைசாரா வழிகளின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய, குறைந்த செலவிலான பண அனுப்பல் வழிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலங்கைக்கெனப் புதிய பண அனுப்பல் வழிகளை ஆய்வுசெய்து ஆலோசிப்பதற்கும் பணம் அனுப்பல் செலவினைக் குறைப்பதன் மீது பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி குழுவொன்றினை நியமித்துள்ளது.
இலங்கையின் அரச மற்றும் தனியார் வணிக வங்கிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றில் உள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இந்தக் குழு உள்ளடக்குகின்றது.