குருநாகல் - அம்பன்பொல தெற்கு பிரிவு கிராம சேவகர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 50 வயதுடைய குறித்த கிராம சேவகர், பிரதேச செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து இன்று காலை உந்துருளியில் பயணித்துள்ளார்.
அதன்போது, சிற்றுந்தொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள், கிராம சேவகரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அவரைக் கூறிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயணித்த வாகனம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பழைய நெல் வகைகளை சேகரிப்பதன் மூலம் விவசாய விளைச்சலை மேம்படுத்த அவர் கடுமையாக உழைத்தவர் என்று குறிப்பிட்டுள்ள உள்ளூர்வாசிகள், சுற்றுச்சூழலில் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தனர்.
அவரது வீட்டில் ஏராளமான பழைய நெல் வகைகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.