நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய!

நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் 26ஆவது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  இன்று அதிகாலை ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட்டச் சென்றுள்ளதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நாளைய தினம் தொடக்கம் 12ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் சென்றுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலநிலை மாற்றம் தொடர்பாகனவும் பருவநிலை நெருக்கடியைச் கையாள்வதற்கும் நாடுகள் தங்கள் உத்திகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைப் பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

அத்துடன் நவம்பர் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகள் உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் 197 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், அறிஞர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25,000 பேர் கலந்துகொள்வார்கள்.

ஜனாதிபதியுடன் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அரச தலைவரின் ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே  மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க  ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.