இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் நடவடிக்கைகளை மீளத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர், மத்திய வங்கி நாணயச் சபையினால் சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக, கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வரையறுக்கப்பட்ட வகையில், ஆறு (06) மாதங்களுக்கு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மீண்டும் அதற்கான அனுமதிக்கான கட்டளையை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது.