அரச ஊழியர்களையும் பணிக்கு அமர்த்துவது தொடர்பான சுற்றுநிருபம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்களையும் பணிக்கு அமர்த்துவது தொடர்பான சுற்றுநிருபம்!


அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்றுநிருபம் ஒன்று இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது.


பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டுகொண்டு, குறித்த ஊழியர்ககளை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சாரும் என கூறப்பட்டுள்ளது.


உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமைபோன்று கடமைக்குச் சமுகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய அரச ஊழியர்கள் இணைய வழியின் ஊடாக தமது கடமைகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கடமைகளுக்கு அழைக்கப்படும் நபர்கள், கடமைக்கு சமூகமளிக்காத நாட்களில் இணைய வழியாக தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள், பால் ஊட்டும் தாய்மார்கள் மற்றும் ஏனைய நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களை கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும், அவ்வாறான ஊழியர்கள் அத்தியாவசிய கடமைகளுக்காக மாத்திரம் அழைக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.