சிறையிலிருந்து ரஞ்ஜன் அனுப்பிய கடிதத்தினால் பரபரப்பு!

சிறையிலிருந்து ரஞ்ஜன் அனுப்பிய கடிதத்தினால் பரபரப்பு!பன்டோரா ஆவண சர்ச்சை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு விசேட கடிதமொன்றை தனது சட்டத்தரணி ஊடாக இன்று (14) அனுப்பியுள்ளார். 

மறைக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து பன்டோரா ஆவணத்தின் ஊடாக அம்பலமாகியவர்களின் பட்டியலில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட விடயங்களும், ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக ரஞ்ஜன் ராமநாயக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்க அவகாசம் தருமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.