ஏறாவூர் பகுதியில் தொடர் மின்தடை; சமூக நல சேவை அமைப்பினரால் மனுத் தா‌க்க‌ல்!

ஏறாவூர் பகுதியில் தொடர் மின்தடை; சமூக நல சேவை அமைப்பினரால் மனுத் தா‌க்க‌ல்!


ஏறாவூர் பிரதேசத்தில் தொடர்ந்தேச்சியாக  திடீர் திடீரென மின்விநியோகம் துண்டிக்கப்படுவது தொடர்பாக, அதனை ஆராய்ந்து தீர்வை பெற்றுத்தருமாறு கோரி,
இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொது முகாமையாளர், பொறியியலாளர் ச. அலகொட அவர்களின் கவனத்துக்கு ஏறாவூர் சமூக நல சேவை அமைப்பினரால் மனு ஒன்று கொண்டு செல்லப்பட்டது.

இம்மனுவை கையளிக்கும் நிகழ்வில், அவ்வமைப்பின் தலைவர், முஹம்மத் அஹ்மத், இணைப்பாளர், நவாஸ் தாவூத் உட்பட, பிரதி செயலாளர் முஹம்மத் ரஸீம் மற்றும் செயற்குழு உறுப்பினர், முஹம்மத் சமீம் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

எமது மனுவை, Eng. Aneedha (Valaichenai CEB) பெற்றுக்கொண்டார்.

அண்மைக் காலமாக ஏறாவூர் பிரதேசத்தில் தொடர்ந்தேச்சியாக அவ்வப்போது மின் துண்டிக்கப்படுவது காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

சிறு தொழில் முயட்சியாளர்கள் உட்பட, இணையவழிக் கற்றலில் ஈடுபட்டுள்ள பாடசாலை மாணவர்களும் இத்தொடர்ச்சியான மின் துண்டிப்பினால் பல்வேறு வகையான அசெளகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அத்துடன், முன் அறிவித்தல் எதுவுமின்றி குறுகிய நேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பாவனையில் உள்ள மின்சாதனப் பொருட்களுக்கும் பழுதுக்கு உள்ளாகுவதுடன் பாவனைக்கு உதவாத நிலைமையும் ஏற்படுகிறது.    

 பொதுமக்களின் இச்சிரமத்தை கருத்தில் கொண்டு, இதற்கு முன்னரும் நாங்கள் இது தொடர்பாக, ஏறாவூர் நகரசபை, ஏறாவூர் பிரதேச செயலகம், மற்றும் ஏறாவூர் சம்மேளன சபை ஊடாக ஏறாவூர் மின்சார சபைக்கு இப்பிரச்சினையை கொண்டு சென்றிருந்தும், எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை 

அதனடிப்படையி்ல் எமது அடுத்த கட்ட நகர்வாக 30/09 அ‌ன்று இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளோம். அந்த வகையில் எமது இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்து உரிய தீ்ர்வை பெற்றுத்தருவதாக, கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அலகொட நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.