பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் விசாரணைக்கு அவர் சமூகம் தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.
அதேநேரம், முன்னாள் அவரின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.