ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவருக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்தது!

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவருக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்தது!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியவர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று (27) நிறைவுக்கு வந்துள்ளது.


குறித்த வழக்கு இன்று கொழும்பு பதில் நீதவான் சஞ்சய கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதன்போது பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக மூவரடங்கிய விஷேட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தனர்.


அதனால் அவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை நிறைவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.


குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதவான் குறித்த வழக்கு விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.