பஹான்துடுவ ஆபாச காணொளி வெளியிட்ட தம்பதிக்கு வழங்கப்பட்ட தண்டனை!

பஹான்துடுவ ஆபாச காணொளி வெளியிட்ட தம்பதிக்கு வழங்கப்பட்ட தண்டனை!


பலன்கொட பஹான்துடுவ நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொளியை பதிவு செய்து வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.


பஹான்துடுவ ஆபாச காணொளி நாட்டில் பெரும் சார்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த காணொளியுடன் தொடர்புடைய தம்பதியினருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அது ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த தம்பதியினருக்கு 10,800 ரூபா அபராதமும் விதிப்பதாக பலங்கொட நீதவான் ஜயரூவான் திஸாநாயக்க அறிவித்தார்.


மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஆண் ஒருவருக்கும், எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான பெண் ஒருவருக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியை கடந்த 03ஆம் திகதி பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்திருந்தனர்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.