பாரிய கேரள தங்கக் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்?

பாரிய கேரள தங்கக் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்?


பாரிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட ஸ்ராவ்யா சுதாகர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அக்சரா ரெட்டி என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட ஸ்வராவ்யா சுதாகர் என்பவர் தான் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அக்சரா ரெட்டி என அதிர்ச்சி தகவல் பரவிவருகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பா, சகோதரர் பற்றி பேசிய அக்சரா, கேரள தங்கக் கடத்தல் வழக்கில் விசாரிக்கப்பட்டதை தெரிவிக்கவில்லை என்றும் தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் ஸ்ராவ்யா சுதாகர் என்ற பெயரில் பங்கேற்றவர் தான் இந்த அக்சரா என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சம்ந்தப்பட்ட அக்சரா ரெட்டி தரப்பில் இருந்து விளக்கமளித்தால் மட்டுமே தெரியவரும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


-இந்திய ஊடகம்Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.