தொலைப்பேசி இலக்கத்தை மாற்றாது வேறு வலையமைப்பை மாற்றும் சேவைக்கு அனுமதி!

தொலைப்பேசி இலக்கத்தை மாற்றாது வேறு வலையமைப்பை மாற்றும் சேவைக்கு அனுமதி!

அனைத்து தொலைபேசி பாவனையாளர்களும் தமது தொலைப்பேசி இலக்கத்தை மாற்றாது வேறோர் வலையமைப்புக்கு மாற்றம் செய்வதற்கான குறித்த சேவைக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) இயக்குநர் ஜெனரல் ஒஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் இந்த வசதி எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் அளவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.