2022 ஐபிஎல் தொடருக்கு புதிதாக அறிமுகமான இரு அணிகள் தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2022 ஐபிஎல் தொடருக்கு புதிதாக அறிமுகமான இரு அணிகள் தொடர்பான அறிவிப்பு!


ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளின் ஏலம் முடிவடைந்தது. மேலும் யார் ஏலம் எடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக 02 அணிகள் கொண்டு வரவிருப்பதாக BCCI அறிவித்திருந்தது. அதன்படி 2 அணிகளை ஏலம் விடும் பணிகளும் நடைபெற்றன.


2 புதிய அணிகள் எந்த ஊரை சேர்ந்ததாக இருக்கப்போகிறது, யார் வாங்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.


இந்த 2 அணிகளையும் வாங்குவதற்கான ஏலம் இன்று துபாயில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதற்கான IIT எனப்படும் விண்ணப்ப படிவங்களை 22 பெரும் நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இதனை ரூ. 10 லட்சம் கொடுத்து வாங்கியிருந்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஆனால் 10 நிறுவனங்களுக்கும் குறைவாகவே ஏலத்தில் பங்கேற்றாத தெரிகிறது. ஏலம் வாங்குவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. ஏலம் எடுக்கும் தனி நபரோ அல்லது நிறுவனமோ ஆண்டுக்கு குறைந்தது ரூ. 2,000 கோடி (இந்திய நாணயம்) வருமானம் ஈட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


2 புதிய அணிகளையும் வாங்குவதற்காக இந்தியாவை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகின்றன. ஏற்கனவே அதானி குழுமம், ஆர்பி சஞ்சீவ் கோங்கே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமம், மான்செஸ்டர் யுனைட்டெட், ஆரோபிண்டோ பார்மா நிறுவனங்கள் கடுமையாக போட்டிப்போட்டன. இதே போன்று அயல்நாட்டை சேர்ந்த பணம் முதலீட்டு நிறுவனங்களும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.


இந்நிலையில் 2 அணிகளுக்குமான ஏலம் நிறைவடைந்துவிட்டது. ஒரு அணி அகமதாபாத் நகரத்தை சேர்ந்ததாகவும், மற்றொரு அணி லக்னோவை சேர்ந்ததாகவும் இருக்கப்போகிறது. அதன்படி அதானி குழுமம் அகமதாபாத் அணியையும், மேன்செஸ்ட யுனைட்டெட்டின் உரிமையாளர்கள் லக்னோ அணியையும் ஏலத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.


புதிய ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கு ஏலத்தின் ஆரம்பத் தொகையாக ரூ.2,000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆரம்ப தொகையானது ரூ.1,700 கோடிதான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் மாற்றப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு அணியையும் ரூ.7,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை வருமானம் ஈட்ட BCCI திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.


-இந்திய ஊடகம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.