கேஸ் சிலிண்டர் விலை 2,021 ரூபாவாக விற்பனை செய்ய கோரிக்கை?

கேஸ் சிலிண்டர் விலை 2,021 ரூபாவாக விற்பனை செய்ய கோரிக்கை?


உள்நாட்டுச் சந்தையில் 12.5 கிலோ கிராம் கேஸ் சிலிண்டர் விலை 2,021 ரூபாவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற போதிலும் இன்று 1,493 ரூபாவுக்கே வழங்கப்பட்டு வருவதாக லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவிக்கின்றது.

ஆகவே 1,200 ரூபாவினால் சிலிண்டர் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஒன்றியம் கூறுகிறது.

சர்வதேச  சந்தையில் இன்று முதல் கேஸ் மெற்றிக் தொன் விலை 800 அமெரிக்க டொலர்வரை அதிகரித்திருப்பதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 09 மாதங்களாக விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவிக்கின்றது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.