சமையல் எரிவாயு விலையை 1200 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 2800 ரூபாவிற்கு விற்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டலின் விலை 1495 ரூபாவாக இருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை தற்போது 800 டொலராக இருக்கிறது. இதனால், இந்த அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி கோரியுள்ளது.
கப்பலுக்கான கட்டணம், காப்பீட்டு தொகை உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக 700 ரூபா செலவாகின்றது.
லிட்ரோ நிறுவனம் கடந்த 9 மாதங்களாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காமையினால் நிறுவனத்துக்கு 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் லிட்ரோ நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதோடு நவம்பர் மாதமளவில் திறைச்சேரியில் இருந்து நிதி கிடைக்காவிடத்து எரிவாயுயை கொண்டு வர முடியாத நிலை ஏற்படும் எனவும் அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
1200 ரூபா விலை அதிகரிப்பிற்கு அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் குறித்த தொகையை திறைசேரி செலுத்த வேண்டும் என்று லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.