10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அமோக வெற்றி!

10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அமோக வெற்றி!


உலகக்கிண்ண ரி20 போட்டியின் சூப்பர் 12 சுற்றில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்தியா அணியை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.


அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.


இந்திய அணி சார்பில் அணித்தலைவர் விராட் கோலி 57 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.


ரிஷாப் பண்ட் 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.


பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.


இதன்படி, பதிலுக்கு 152 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான அணி 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது.


அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பாபர் ஹசாம் மற்றும் மொஹமட் ரிஷ்வான் ஆகியோர் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.


அதன்படி, பாபர் ஹசாம் 68 ஓட்டங்களையும், மொஹமட் ரிஷ்வான் 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.