இன்று காலை நடைபெற்ற தேசிய கோவிட் பணிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட 08 முக்கிய முடிவுகள்!

இன்று காலை நடைபெற்ற தேசிய கோவிட் பணிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட 08 முக்கிய முடிவுகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை நடைபெற்ற தேசிய கோவிட் பணிக்குழு கூட்டத்தில் 08 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன் போது எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
  1. ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசியை நவம்பர் 1 முதல் முன்னணி தொழிலாளர்களுக்கு பூஸ்டராக வழங்குதல். 
  2. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசியை செலுத்தி முடித்தல்.
  3. தற்போதைய கோவிட் இறப்புகளை பூஜ்ஜியமாக (0) குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
  4. வைரஸ் பரவுவதைத் தடுக்க தொற்றாளர்களின் பிரதேசங்களில் அதிக கவனம் செலுத்துதல்.
  5. ஆரம்பப் பிரிவிற்கான பாடசாலைகள் மற்றும் 11 மற்றும் 13 வகுப்புகளை ஆரம்பித்தல்.
  6. அக்டோபர் 31 முதல் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கல்.
  7. திங்கள்கிழமை (ஒக்டோபர் 25) முதல் மாகாணங்களுக்குள் புகையிரத சேவைகள் ஆரம்பித்தல்.
  8. நவம்பர் 1 முதல் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகள் ஆரம்பித்தல்.
(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.