நாட்டு மக்கள் ஒரு வேளை உணவை தியாகம் செய்ய வேண்டும்! -SLPP

நாட்டு மக்கள் ஒரு வேளை உணவை தியாகம் செய்ய வேண்டும்! -SLPP


நாட்டின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், நாட்டு மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது உணவை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,

"வெறும் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு மட்டும் ஒரு குடும்பத்தின் செலவை ஈடுசெய்யாது என்று நாம் அறிவோம், இருப்பினும் அத்தகைய நோக்கங்களுக்காக அரசாங்கம் அதிக பணத்தை ஒதுக்கும் நிலையில் இல்லை.

இந்த தருணத்தின் நாம் அனைவரும் தியாகங்கள் செய்ய வேண்டும். நாங்கள் (எம்.பி.க்கள்) எங்களது ஒரு மாத சம்பளத்தை கோவிட் நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளோம். அதேபோன்று பொதுமக்களும் தியாகங்களை செய்ய வேண்டும்.

ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடும் பழக்கமுடையவர்கள், ஒரு குறுகிய காலத்துக்கு ஒரு வேளை உணவை தியாகம் செய்ய வேண்டும், அப்படி செய்தோமேயானால் எமது எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும், அதே நேரத்தில் கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதேநேரம், அரசாங்கம் வருவாயை இழக்கும்போது, ​​அரசாங்கம் உதவியற்றதாக மாறியுள்ளது, மேலும் இதனால் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் தொடர்பில் அரசாங்கம் வருத்தமடைகிறது" என்றார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.