முதல் ODI போட்டியில் இலங்கை அணி வெற்றி!

முதல் ODI போட்டியில் இலங்கை அணி வெற்றி!

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணான்டோ அதிகபட்சமாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், சரித் அசலங்க 72 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரும் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அகில தனஞ்சய இரண்டு விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.