
பதினாறு வயது அல்லது அதற்கு முன்னதாக அதே எண்ணுடனான தேசிய அடையாள அட்டையை வழங்குவது குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஐந்து முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தியதுள்ளதோடு, இதில் இந்த முயற்சி குழந்தைகள் மற்றும் நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
