
தாடி மற்றும் மீசை முற்றாக மழிப்பது இஸ்லாமிய சட்டத்திற்கு முரணானது எனவும் இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமக்கு இப்படியான உத்தரவு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள சலூன் உரிமையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
தலை முடி மற்றும் தாடிகளை மழிக்கும் அமெரிக்க முறையில் இருந்து மாறுமாறும் தலிபான் அமைப்பு சலூன்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.