
இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்தார்.
"பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவோம். பேருந்து ஊழியர்களுக்கும் சில நிவாரணங்களை நாங்கள் வழங்கவுள்ளோம். 17,000 பேருந்துகளுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. உதாரணமாக டயர்கள், எரிபொருள், மசகு எண்ணெய், பேட்டரிகள், உதிரி பாகங்கள், காப்பீடு ஆகியவற்றுக்கான வவுச்சர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.”