கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்! புத்தளத்தில் சம்பவம்!

கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்! புத்தளத்தில் சம்பவம்!


பெண் ஒருவர் ஒரே பிரவசத்தின் மூலம் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று புத்தளம் வைத்தியசாலையில்  பதிவாகியுள்ளது.


குறித்த அப்பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து பின்னர் அவர் வெளியேறினார்.


எனினும், கர்ப்பத்தின் 34 வாரங்கள் முடிந்த பிறகு, உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இவ்வாறு மூன்றி குழந்தைகளை எதிர்பார்த்த மருத்துவமனை அதற்கான ஆயத்தங்களை செய்ததாக கூறப்படுகிறது


பின்னர் அங்கு அப்பெண் கர்ப்பத்தின் 35 வது வாரத்தில் சிசேரியனுக்கு உட்படுத்தப்பட்டார்.


வெற்றிகரமாக நிறைவுபெற்ற சிகிச்சையின் பின்னர் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று சிசுக்களும்  தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.