மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணிகள் தொடர்பில் அமைச்சர் கூறிய நற்செய்தி!

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணிகள் தொடர்பில் அமைச்சர் கூறிய நற்செய்தி!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளதோடு, எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்குள் அதிவேக நெடுஞ்சாலை பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 39.7 கி.மி கொண்ட மீரிகம-குருநாகல் பிரிவு 25 நிமிடங்களில பயணிக்க முடியும்.

கொழும்பில் இருந்து கண்டி, குருநாகல் மற்றும் தம்புள்ளைக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த நெடுஞ்சாலை முகவும் வசதியாக இருப்பதோடு, கொழும்பிலிருந்து கண்டியை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இது அமையும்.

கொழும்பில் இருந்து பயணிப்போருக்கு நுழைவாயிலானது கம்பஹா மாவட்டத்தில் உள்ள மீரிகம பிரதேசத்திலும், வெளியேறும் இடம் குருநாகல் இலும் காணப்படுகின்றது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 1 கடவத்தையில் இருந்து மீரிகம வரை சுமார் 37 கி.மீ

பிரிவு 2 மீரிகம முதல் குருநாகல் வரை சுமார் 39.7 கி.மீ. மீர்கம முதல் அம்பேபுஸ்ஸ் 9.1 கி மீ

பிரிவு 3 பொத்துஹெர முதல் கலகெதர வரை சுமார் 32.5 கி.மீ

பிரிவு 4 குருநாகல் முதல் தம்புள்ளை வரை சுமார் 60.3 கி.மீ

முழு திட்டமும் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் இதற்கான மொத்த செலவு அண்ணளவாக ரூ. 200 பில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.