குருநாகலை - நாவின்ன சந்தியில் சற்றுமுன்னர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு ஜீப் வண்டி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் குருநாகல் தீயணைப்பு படையினர் வந்து தீயணைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது, ஜீப்பின் முன்பகுதி முழுமையாக தீக்கரையானது.
எனினும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.