கண்டி, கட்டுகஸ்தோட்டையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மற்றுமொரு வைத்தியர் உயிரிழப்பு!

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மற்றுமொரு வைத்தியர் உயிரிழப்பு!

கண்டி, கட்டுகஸ்தோட்டை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காக இறந்த சமீபத்திய சுகாதாரப் பணியாளர் ஆனார்.

நேற்று (15) இரவு பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவர் சயீத் ரஃபைதீன், வயது 61, தொற்றுக்கு இலக்காகி கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) ஏறக்குறைய மூன்று வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவர், அவரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், நேற்று உயிரிழந்தார். 

மாவில்மடையில் வசிக்கும் இவர் தற்போது கொரோனா பராமரிப்பு மையமாக செயல்படும் கட்டுகஸ்தோட்டை மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி மையவாடிக்கு இவரின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.