கொரோனா வைரஸானது சாதாரண குளிர்க்காய்ச்சலா? - வெளியான மருத்துவ ஆய்வறிக்கை!

கொரோனா வைரஸானது சாதாரண குளிர்க்காய்ச்சலா? - வெளியான மருத்துவ ஆய்வறிக்கை!

கொரோனா வைரசுக்கு எதிரான உயர்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு கலப்பின நோய் எதிர்ப்பு தற்போது உலகின் சில பகுதிகளில் உருவாகி வருவதை ஒரு அமெரிக்க ஆய்வு உறுதி செய்துள்ளதாக வெளி நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

சமீபத்திய கண்டுபிடிப்புகள் அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இவ்வாறு மக்களிடயே உருவாகி வரும் உயர்ந்த நோய் எதிர்ப்பு சக்தியானது கொரோனா வைரஸ் தொற்று பொதுவான குளிர் வைரஸாக உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய கோவிட் திரிபுகள் மற்றும் எதிர்கால மாறுபாடுகளுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உயர்ந்த நோய் எதிர்ப்பு சக்தியானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட சார்ஸ் சார்ஸ் நோயை ஏற்படுத்தும் முதல் கொவிட் வைரஸ் மற்றும் அதன் மாதிரிகளுக்கு கொவிட் வைரசுக்கு போன்றே சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.