புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட சென்ற உயிரியல் ஆய்வாளரை ஊரடங்கில் பயணித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்த பொலிஸார்!

புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட சென்ற உயிரியல் ஆய்வாளரை ஊரடங்கில் பயணித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்த பொலிஸார்!


பம்பலப்பிட்டி - கின்ரோஸ் பகுதியில் கடற்பரப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட சென்ற கடல் உயிரியல் ஆய்வாளர் கலாநிதி ஆசா டி வொசை முடக்கல் நிலையில் பயணம் செய்ததாக தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


அவர் இதனை அவரது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.


இன்றைய தினம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை பார்வையிடுவதற்காக நான் கின்ரோஸ் கடற்கரைக்கு சென்றேன் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


எனது தந்தை காரை செலுத்தினார் எனினும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவித்து என்னை கைதுசெய்தார்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.


தேசிய பூங்காவிற்கும் படகு சவாரிக்கும் செல்பவர்களிற்கும் வேலைக்கும் செல்பவர்களிற்கும் இங்கு ஒரே சட்டம்  என எனக்கு தெரிவிப்பவர்களிற்காக நான் இதனை நான் பகிர்ந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.


நான் கடற்கரையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட சென்றேன் அது எனது பணி என அவர் தெரிவித்துள்ளார்.


நான் பொழுதுபோக்கிற்காக செல்லவில்லை, கடற்கரையில் ஏற்பட்ட பாதிப்பகளை மதிப்பிடவே சென்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.