மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட ஒன்றிணைவார்கள்! விமல் நம்பிக்கை!

மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட ஒன்றிணைவார்கள்! விமல் நம்பிக்கை!


சில தொழிற்சங்கங்கள் எவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டாலும், அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களும், மாணவர்கள் குறித்து சிந்தித்து கற்பித்தலில் ஈடுபட ஒன்றிணைவார்கள் என தாம் நம்பிக்கை கொள்வதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


ஆசிரியர், அதிபர் பிரச்சினை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சவை உப குழுவின் உறுப்பினரான அவர், இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.


தங்களிடம் கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு அதிபர், ஆசிரியர்களுக்கு உள்ளது.


அவர்களுக்கு நியாயம் நிறைவேற்றப்படும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையாலேயே அமைச்சரவையில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.