கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறும் முறையில் திருத்தம்!

கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறும் முறையில் திருத்தம்!


கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறும் உத்திகளை தொடர்பான சுகாதார அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.


இந்நிலையில் சுகாதாரத் துறை, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பிற துறைகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புதிய மூலோபாயத்தின்படி, சுகாதாரத் துறை மற்றும் அத்தியாவசிய சேவைத் துறைகளில் உள்ளவர்கள் தொற்று மற்றும் அறிகுறி தென்பட்டால்10 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். ஏனைய அனைவருக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.


இத்திருத்தம் 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுடன் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(யாழ் நியூஸ்)Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.