
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த 4 வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கொவிட் மரண எண்ணிக்கை மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.