
எனவே California Streaming Event 2021 மூலம் ஐபோன் 13 சீரிஸ் ரிலீஸிற்கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ், இன்றைய (செப்டம்பர் 14) நிகழ்வில் லாஞ்ச் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. இன்றைய நிகழ்வின் போது ஆப்பிள் தனது மூன்றாம் தலைமுறை AirPods-களையும் லாஞ்ச் செய்ய கூடும் என்று பல அறிக்கைகள் பரிந்துரைத்துள்ள அதே நேரத்தில், இந்த ப்ராடக்ட் (third-generation AirPods) அறிமுகத்தை ஆப்பிள் நிறுவனம் இன்று தவிர்க்க கூடும் என்று சில அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
எனவே நிகழ்வின் போது தான் இது பற்றிய சரியான தகவல் நமக்கு கிடைக்கும். கோவிட் தொற்று நோய் அபாயம் காரணமாக ஆப்பிள் பார்க்கில் நடைபெறும் “California Streaming" நிகழ்வு, ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதற்கான லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (https://youtu.be/EvGOlAkLSLw)
தவிர ஐபோன் 13 வெளியீட்டின் நேரடி ஸ்ட்ரீமிங்கை காண ஒரு பிரத்யேக ஆப்பிள் நிகழ்வு பக்கம் (dedicated Apple event page) ஒன்றும் தயார் செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த நிகழ்வை நேரலையில் பார்க்க விரும்புவோர் ஆப்பிள் வெப்சைட்டின் ஈவன்ட் பேஜிற்கு சென்றும் பார்க்கலாம். ஆப்பிளின் இந்த ஆண்டின் மிகப்பெரிய இந்த நிகழ்வு செப்டம்பர் 14 (இன்று) இரவு 10:30 மணிக்கு துவங்கும் என்று தெரிகிறது.
ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ள நிலையில், ஸ்ட்ரீமிங் லைவிற்கு வரும் போது அட்வான்ஸ்டு நோட்டிஃபிகேஷன்களை பெற யூசர்கள், ரிமைண்டரை செட் செய்து கொலள்ளலாம். ஐபோன் 13 வெளியீட்டு நிகழ்வை ஆப்பிள் டிவி யூசர்களும் பார்க்க முடியும். இந்த ஈவன்ட் முடிந்த பிறகு முழு ஈவன்டையும் Apple Podcasts app-ல் பார்க்க முடியும். இதன் மூலம் California streaming நிகழ்வில் ஆப்பிளின் என்னென்னெ ப்ராடக்ட்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ், முந்தைய ஐபோன் மடல்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு புதிய மேம்பாடுகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 சீரிஸுடன் ஒப்பிடுகையில் ஐபோன் 13 சீரிஸ் சிறிய நாட்ச் கொண்டிருக்கலாம், மேலும் பெரிய கேமரா சென்சார்கள் இருக்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஒரு பெரிய வடிவமைப்பு புதுப்பிப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.