லொஹான் ரத்வத்த மற்றும் அவரது தந்தை யார் என்று கண்டி - உடதலவின்ன பகுதிக்கு சென்று கேட்டால் தெரியும்! மனோ கணேசன்

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது தந்தை யார் என்று கண்டி - உடதலவின்ன பகுதிக்கு சென்று கேட்டால் தெரியும்! மனோ கணேசன்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி நீங்கியிப்பதானது ராஜபக்ஷ அரசினால் நடத்தப்பட்ட வெறும் கண்துடைப்பு நாடகமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விமர்சித்துள்ளார்..


கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து பேசிய அவர், 


லொஹான் ரத்வத்த மற்றும் அவரது தந்தையார் பற்றிய செயற்பாடுகளை கண்டி - உடதலவின்ன பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களைச் சென்று கேட்டால் தெரியவரும். சிறைச்சாலைக்குச் சென்று தமிழ்க் கைதிகளை முழந்தாலிடச் செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கோரி இராஜினாமா செய்ததை ஏற்க முடியாது; இது மனித உரிமை மீறல்; அப்படியென்றால் நானும் வெளியே சென்று நபரைப் பிடித்து சித்திரவதை செய்த பின் மன்னிப்பு கேட்டு இராஜினாமா செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.