மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான இ.போ.ச பேரூந்து ஓட்டுனர்!

மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான இ.போ.ச பேரூந்து ஓட்டுனர்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று (02) மாலை மின்னல் தாக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலி நாவட்காடு பகுதியில் நெல் பயிரிட்டுக்கொண்டிருந்த போது கடும் மழை காரணமாக மின்னல் தாக்கி அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை SLTB (இ.போ.ச) டிப்போவில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணம் உடுப்பிடியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பேருந்து ஓட்டுநரின் உடல் அச்சுவேலி வட்டார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல்துறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.