அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்த வாட்ஸாப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்!

அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்த வாட்ஸாப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்!


வாட்ஸாப் செயலியில் தொடங்கப்பட்டதிலிருந்து ஏனைய செயலிகளில் இருந்து அதை வேறுபடுத்தி காட்டும் ஒரு அம்சமாக இருந்தது அதன் லாஸ்ட் சீன் (Last Seen) அம்சமாகும்.


இப்போது, வாட்ஸாப் இந்த அம்சத்தை "இன்னும்" மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


தற்போது வரை, வாட்ஸாப் பயனர்கள் ‘Everyone’, ‘My Contacts’ மற்றும் ‘Nobody’ என்கிற மூன்று விருப்பங்களை மட்டுமே லாஸ்ட் சீன் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அம்சத்தின் கீழ் பெறுகிறார்கள்.


இருப்பினும், WABetaInfo வழியாக வெளியான அறிக்கையின்படி, வாட்ஸாப் நிறுவனம் ஆனது 'My contacts except…' என்கிற மேலுமொரு விருப்பத்தை வெளியிடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.


இந்த விருப்பத்தின் பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த விருப்பம் குறிப்பிட்ட தொடர்புகளுக்கு 'லாஸ்ட் சீன்' பார்த்த டைம்ஸ்டாம்ப்பை முடக்க அனுமதிக்கும்.


குறிப்பிட்ட தொடர்புகளை (Contacts) மட்டும் தவிர்க்கும் விருப்பத்தை பயனர்கள தேர்வு செய்தால், பொதுவாக Nobody என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கும்போது அது எப்படி வேலை செய்யுமோ, அதாவது யாராலும் உங்கள் லாஸ்ட் சீனை பார்க்க முடியாதோ.. அதேபோல நீங்கள் தேர்வு செய்த குறிப்பிட்ட நபர்களால் மட்டும் உங்கள் லாஸ்ட் சீனை பார்க்க முடியாது.


மேலும் இந்த அம்சம் தற்போது iOS பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று வெளியான WABetaInfo-வின் அறிக்கை கூறுகிறது. ஆனால் அது நிச்சயமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இப்போதைக்கு, எதிர்பார்க்கப்படும் திகதி அல்லது இதுசார்ந்த அப்டேட் ரிலீஸ் ஆகும் திகதி பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. (யாழ் நியூஸ்)Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.