யாழ். அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி நேரடியாக சென்று விசாரணைகளை இன்று (19) காலை மேற்கொண்டார்.
நேற்று இரவு, மனைவியால் திருவலகை மூலம் அடித்துக் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் துரைராசா செல்வகுமார் (32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.
இதேவேளை கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் நேற்றைய தினமும் அவ்வாறு குடிபோதையில் வந்து செய்தமையினால், ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸாரிடம் அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.