பதுக்கி வைத்திருந்த பால் மா பெக்கட்டுக்கள் மீட்பு!!

பதுக்கி வைத்திருந்த பால் மா பெக்கட்டுக்கள் மீட்பு!!


ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் பல சரக்கு கடைகளை இன்று (22) பரிசோதனை செய்தனர்.


இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வர்த்தக நிலையம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்த பால் மா பெக்கட்டுக்கள் மீட்கப்பட்டு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் மேற்பார்வையில் அவ் வர்த்தக நிலையத்தில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.


நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.


இந்த திடீர் சோதனை நடவடிக்கை ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, செம்மண்ஓடை, மாவடிச்சேனை போன்ற பிரதேசங்களில் சீமெந்து, பால் மா, சீனி, அரிசி, உரம், போன்ற பொருட்களை பதுக்கி வைத்துள்ள வியாபாரிகள் தொடர்பாக கண்டறியும் பொருட்டே இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.


பொது மக்களிடத்தில் இருந்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு பால் மா பெக்கட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு தேவையான பால் மா, சீமெந்து, உரம், சீனி, அரிசி போன்ற பொருட்களை பதுக்கி வியாபார நடவடிக்கைகளை யாராவது மேற்கொள்வார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் மேலும் தெரிவித்தார்.


-குகதர்ஷன்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.