
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு நாட்டை திறப்பது தொடர்பில் தீர்மானிக்குமாறு சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை முழுமையாக திறப்பதற்கான பரிந்துரைகளை தாம் முன்வைக்கவில்லை.
நாட்டை முழுமையாக திறத்துவிட்டால் கொரோனா தாக்கத்தின் நிலைமை இன்னும் மோசமடையும்.
எனவே, நாட்டடினைப் படிப்படியாக திறப்பதே மிகவும் பொருத்தமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.